அள்ள அள்ளப் பணம்-8 இன்சூரன்ஸ்

அள்ள அள்ளப் பணம்-8 இன்சூரன்ஸ்

அள்ள அள்ளப் பணம்-8 இன்சூரன்ஸ் - சோம. வள்ளியப்பன்; பக்: 232. ரூ.250; கிழக்குப் பதிப்பகம்,  சென்னை- 14; 044-4200 9603.

சம்பாதிப்பவர் உயிரிழக்க நேரிடும்பட்சத்தில்,  குடும்பத்துக்கு வரும் வருமானம் நின்று போகும். அவரை நம்பி இருந்தவர்கள் பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படக் கூடாது என்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஒரு ஏற்பாடுதான் இன்சூரன்ஸ். பணத்தைப் பாதுகாப்பதும், அதற்கு ஆபத்து ஏற்பட்டால், அதனால் உண்டாகும் இழப்பை ஈடுகட்ட, ஏற்பாடுகள் செய்து கொள்வதும் நிதி மேலாண்மை என்பது குறித்து நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

காப்பீடு, அதனால், கிடைக்கும் பாதுகாப்பு,  இழப்பு, பொதுவான சந்தேகங்களுக்குப் பதில் ஆகியன நூலில் விளக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் அவசியம்,  வகைகள், வீட்டுக் கடனுடன் இணைந்த இன்சூரன்ஸ், குரூப் இன்சூரன்ஸ்,  ஜெனரல் இன்சூரன்ஸ்,  மெடிக்கல் இன்சூரன்ஸ், ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ், டிராவல் இன்சூரன்ஸ், மோட்டார் வாகன இன்சூரன்ஸ், அரசுகள் வழங்கும் இலவசக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எளிமையாகவும், விரிவாகவும்  அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது.

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இன்சூரன்ஸ் விழிப்புணர்வு வந்துள்ளது.   பெரிய  நிதிச் சிக்கல்களில் இருந்து காப்பாற்ற வந்த நல்ல ஏற்பாடு என்பதையும், அதிக சிரமமின்றி இழப்பீட்டுத் தொகைகள் கிடைப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல்தான் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com