எது குற்றம்?

எது குற்றம்?

எது குற்றம்? - க.மாணிக்கவாசகம்; பக்.272: ரூ.300; தஞ்சாவூர்- 613007; 8940533955.

ஆயுள் தண்டனைக்  கைதியின் மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி தன்முனைப்பாக சட்ட நுணுக்கத்துடன் ஆராய்ந்து வழங்கிய திருப்புமுனை தீர்ப்பை கருவாகக் கொண்டு இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்லுடைக்கும் தொழிலாளியின் மகன் கருத்தாய்ப் படித்து கார்பரேட் நிறுவனத்தில் உயர்பதவி வகித்து, காதல் மணம், அழகிய குழந்தை என வசந்தமாய் செல்லும் வாழ்க்கையில், அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள், எதிர்பாராத பேரிழப்புகள், புனைவு வழக்கில் ஆயுள்தண்டனை, மேல் முறையீடு என திருப்பங்களுடன் கதை நகர்கிறது. அதிலும், நீதிமன்ற விசாரணை உச்சகட்ட பரபரப்பை வாசகர்களுக்கு கடத்துகிறது.

நாவலாசிரியர் ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளராக இருந்தபோதும்,  'மாமூல்'  காவல் அதிகாரியின் பாரபட்ச நடவடிக்கைகளை சமரசமின்றி பதிவு செய்துள்ளார்.

குற்றவாளியாகக் கருதப்படுபவர் நொடிப்பொழுதில் நிலை பிறழ்ந்து நிகழ்த்துவது மட்டுமே குற்றம் அல்ல; அந்த நிலை நோக்கி அவரை உந்தித்தள்ளுபவர்களின் செயல்களே பிரதான குற்றம் என்பது ஆழமாக நிறுவப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்ட விதி எண் 14-ன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம், சமமான சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை.  சமூக அநீதிகள், தீய சக்திகளால் பாதிக்கப்படும் அப்பாவி மனிதனுக்கு உடனடி கடவுளாகத் தெரிவது அரசாங்கத்தின் ஓர் அங்கமான காவல்துறைதான். அந்தக் கடமையில் காவல் அதிகாரிகள் கடுகளவும் தவறிவிடக் கூடாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com