புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை -  பேராசிரியர் க. பழனித்துரை;  பக்.  216; விலை: ரூ. 230; கோரல் பப்ளிஷிங் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்,   சென்னை - 600 109.

உள்ளாட்சி அமைப்புகளின் பணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கொள்வது எப்படி என்பவற்றையெல்லாம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  உள்ளாட்சி என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதில் தொடங்கி, 'தலைவர்கள் உருவாக்கம்', 'பேரிடர் மேலாண்மையில் உள்ளாட்சி', 'மாதிரி கிராமம் உருவாக்கல்', 'தேர்தல் முறை மாற்றங்கள்', 'நாம் செய்யத் தவறிய பணி', 'நூறு நாள் வேலை: ஒரு பார்வை' உள்ளிட்ட தலைப்புகளில் 30  கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அரசு நிர்வாகம் மக்கள் நலனுக்காகவே செயல்படும் என்று கூற முடியாது என்று ஒரு கட்டுரையில் (கிராமம் வலுப்பெற) நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

கல்வி முறையில் கிராம மேம்பாட்டுக்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும் 'பணம் சம்பாதிப்பதற்கு என்ற நிலை உருவாகி விட்டது. இன்றைய கல்வி சமுதாயத்தை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அன்று ஆங்கிலேயர்கள் செய்த அதே வேலையை இன்று நம்மைச் சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். அதற்கு அடித்தளமாக அமைந்தது இன்றைய கல்விமுறை' என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளின் ஆய்வு,  பயிற்சி அளித்தல், பத்திரிகைகளில் எழுதுதல் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நூலாசிரியரின் இந்த நூல் பயனுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com