எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம் - சலீம்; மொழிபெயர்ப்பு - சாந்தாதத்; பக்.256; ரூ.145; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்றாக 'எய்ட்ஸ்' கருதப்படுகிறது. இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மருத்துவக் கண்
காணிப்பின் கீழ் அந்நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதுமாகக் குணப்படுத்திவிட இயலாது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற வாழ்க்கை முறையே எய்ட்ஸ் நோய்க்கான ஒரே தீர்வு. இதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டதே இந்த நாவல். 

திருமணமாகி இரு குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் குமார், திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழும் தனது முன்னாள் காதலியான சுதீராவை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார். இருவரும் உடல் ரீதியாக  நெருங்குகிறார்கள்.

சுதீராவுக்கு ஹெச்ஐவி பாஸிட்டிவ் உறுதி செய்யப்படுகிறது. சுதீரா தற்கொலை செய்துகொள்கிறாள். தானும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்போமோ என்கிற சந்தேகமும் குழப்பமும் குமாருக்கு ஏற்படுகிறது. இது அவருடைய குடும்பத்தினரை வெகுவாகப் பாதிக்கிறது. 

இதிலிருந்து குமார் எப்படி மீண்டார் என்பதே 'எரியும் பூந்தோட்டம்'. வரையறுக்கப்படாத சுதந்திரத்தை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு வாழ்க்கை தகுந்த பாடத்தை கற்றுக்கொடுக்கும் என்பதை  சுதீரா கதாபாத்திரம் எடுத்துரைக்கிறது. சபலப்பட்டு செய்யப்படும் ஒரேயொரு தவறு, ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி பாதிக்கும் என்பதையும் அதனூடாக எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வையும் இந்நாவல் ஏற்படுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com