அந்தமான் ஜெயில் அனுபவங்கள்

அந்தமான் ஜெயில் அனுபவங்கள்

பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள் - (தமிழில் ஜனனி ரமேஷ்); பக். 133; ரூ.160; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; ✆ 81480 66645.

அந்தமானில் 'தனிமை சிற்றறைச் சிறை' என அழைக்கப்படும் செல்லுலார் சிறையின் கொடுமையான அனுபவங்களை விவரிக்கிறது இந்த நூல். அலிப்பூர் வெடிகுண்டு சதி வழக்கில் கைதான ஸ்ரீஅரவிந்தரின் இளைய சகோதரர் பரிந்திரகுமார் கோஷ் உள்ளிட்ட ஏழு பேர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதையும், பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் அங்கு அனுபவித்த கொடுமைகளையும் பரிந்திரகுமார் கோஷ் ஆவணப்படுத்தியுள்ளார்.

'அந்தமான் சிறையில் அரசியல் கைதிகள் கொடுமைகளையும் துன்பங்களையும் அதிகமாகவே அனுபவித்தனர். தேங்காயிலிருந்து மட்டையை பிரித்து நாரை உரிப்பது, செக்கிழுத்து எண்ணெய் பிழிவது உள்ளிட்ட பணிகள், கைதிகளிடையே நடைபெற்ற வேலை நிறுத்தம், உண்ணாவிரதம்..' என கைதிகளின் வலிகளை இந்த நூல் பதிவு செய்துள்ளது.

சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்த அதே காலகட்டத்தில் சிறையில் இருந்த பரிந்திர குமார் கோஷ், தனது சக சிறைவாசிகளான உல்லாஸ்கர் தத்தாவின் மனப்பிறழ்வு, இந்து பூஷண் ராயின் தற்கொலை, ஜதிஷ் சந்திர பாலுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இரும்புக் கோட்டையான அந்தமான் சிறையின் காட்சிகளை கண் முன் கொண்டு வரும் வகையில் தமிழில் எளிமையான நடையில் மொழி பெயர்த்துள்ளது சிறப்பு. வலிகள் நிறைந்த சிறை வாழ்க்கையை விவரிக்கும் பரிந்திர குமார் கோஷின் அனுபவங்கள், 'இதுவும் ஓர் அனுபவம்' என்று அவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அதிசயிக்க வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com