கொற்கை நாகரீகம்

கொற்கை நாகரீகம்

கொற்கை நாகரீகம் - குன்றில் குமார்; பக்.102; ரூ.225; சங்கர் பதிப்பகம், சென்னை 49; ✆ 94441 91256.

பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது கொற்கை. மூன்று ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த மாநகரம் இன்று சிற்றூராகக் குறுகி அறியப்படாத கிராமம் போல் உள்ளது. துறைமுக நகரமாக இருந்த இந்த ஊர், இன்று கடலே இல்லாத கிராமமாக உள்ளது. ஆனால், தாமிரவருணி நதி 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தமிழர்களின் வரலாற்றில் சிறந்து விளங்கிய இந்த மாநகரம் எப்படி உருவானது, எதனால் பாண்டியர்களின் தலைநகரம் மதுரைக்கு மாறியது, கொற்கையில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழி எழுத்துகளால் கண்டறியப்பட்ட உண்மைகளின்படி கொற்கை கி.மு.785 முதல் 95 வரை இருக்கலாம் என்ற மதிப்பீடு உள்ளிட்ட பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இலக்கியங்களில் கொற்கையின் சிறப்புகளை குறிப்பாக ஐங்குறுநூறு, அகநானூறு போன்றவற்றில் இடம் பெற்றுள்ள பாடல்களை மேற்கோளிட்டு ஆசிரியர் விளக்கியுள்ளார். பாண்டியர் வரலாறு, 3-ஆம் நூற்றாண்டில் யவன நாட்டு பயணி மெகஸ்தனீஸ் எழுதிய நூலின் தகவல்கள் என பல முக்கிய குறிப்புகள் பண்டைய பாண்டியர்களை அறிந்து கொள்ள உதவும் வரலாற்று தகவல்களாக உள்ளன. குமரிக் கண்டத்தில் பாண்டியர்களின் முதல் தலைநகரமாக விளங்கிய தென் மதுரை, கடல் கோளால் அழிவுற்றது, கபாடபுரம் இரண்டாவது தலைநகரமாக உருவானது, அதுதான் இன்றைய திருச்செந்தூர் நகரம் என்றும் அதன் அருகில்தான் கொற்கை உள்ளது என்றும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல ருசிகரமான தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று தகவல்களை விரும்புபவர்களுக்கு பல விவரங்களை அள்ளித்தரும் அருமையான நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com