செவ்வியல் சிந்தனைகள்

செவ்வியல் சிந்தனைகள்

செவ்வியல் சிந்தனைகள் - முனைவர் இராம.குருநாதன்; பக்.192 ; ரூ.200- மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 93805 30884.

வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் குறித்து நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வெளியாகியுள்ளது. சங்க இலக்கியத்தில் அகம், புறம் பற்றிய கோட்பாடுகள், அறச்சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆற்றுப்படை பற்றிய குறிப்புகள் புதிய பார்வையைக் காட்டுகின்றன. கையறுநிலை பாடல்களில் துயரம், சடங்குகள், நம்பிக்கை என பல்வேறு படிநிலைகள் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன.

புத்தரின் போதனைகளைக் கொண்ட பெளத்தர்களின் புனிதநூலாக கருதப்படும் திரிபிடகத்தின் மூன்று தொகுப்புகளில் ஒன்றான தம்மபதத்தில் கூறப்பட்டுள்ள அறநெறிக் கருத்துகள், ஆன்ம விடுதலைக்கு வழிகாட்டும் கருத்துகளை திருக்குறளும் வலியுறுத்துகிறது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பிய அகவிலக்கணத்துக்குரிய வரையறைகளைச் சங்க இலக்கியம் பெற்றதைப்போல, முத்தொள்ளாயிரம் பெறவில்லை என்றாலும், சங்க இலக்கிய மரபுக் காட்சிகளின் வழியாக இயங்குகிறது என்பதற்கான சான்றுகள் நூலில் கூறப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய அண்மைக்கால ஆய்வுகள் வளர்ச்சியும் போக்கும் குறித்த பார்வை மேலாய்வுக்கு இட்டுச் செல்லும் வகையில், பழைய இலக்கியங்களை எவ்வாறு, எந்த வகையில் அணுகுவது என்ற சிந்தனையை விதைக்க முயன்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பழங்குடியினர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை முறைகள் மானுடவியல் சிந்தனைகளின் நோக்கில் காட்டப்பட்டதும் சிறப்பானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com