வியத்தகு சிறுநீரகங்கள்

வியத்தகு சிறுநீரகங்கள்

வியத்தகு சிறுநீரகங்கள் - டாக்டர் ப.செல்வராஜ்; பக்.232; ரூ.340; ஸ்நேகா பதிப்பகம், ரமணி நகர் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை-45.

சிறுநீரகங்கள் பற்றிய புரிதலை, பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் நூலாசிரியர் எளிய மொழி நடையில் எழுதியுள்ளார்.

ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், ரசாயனங்களையும் சுத்திகரிக்கும் உறுப்பு சிறுநீரகம்.

ரத்த அழுத்தம் சீராக இருக்கப் புரியும் உதவி, ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்தாலே சிறுநீரகங்கள் செயல் திறனை இழக்கும் உள்ளிட்ட பல வியத்தகு விஷயங்கள் குறித்து நூலின் வழியே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் மயக்கம் ஏற்படுவதோடு, அதனால் திடீரென சிறுநீரக செயலிழப்பு நேரிடக்கூடும் என்ற உண்மையையும் எடுத்துரைத்துள்ளார்.

சிறுநீரகங்களின் மகத்துவம், அதனை எப்படிக் காப்பது, முன்கூட்டியே நோய்களை அறிதல், ஒவ்வொரு பாதிப்புக்குமான அறிகுறிகள், சிகிச்சைகள் என்பன உள்ளிட்ட விவரங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மருத்துவ நூல் என்ற வரையறையுடன் நில்லாமல், பாட நூல் போன்று ஒவ்வொரு கட்டுரையிலும் எண்ணற்ற வரைபடங்களைக் குறிப்பிட்டு விளக்கியிருப்பது சிறப்பு.

சிறுநீரகங்கள் மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய சிறுநீர் பாதை, பிறப்புறுப்பு, அவற்றில் ஏற்படும் பாதிப்புகளும், சிகிச்சைகளும் தெளிவுற எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

பிற்சேர்க்கையில் மருத்துவக் கலைச் சொற்களுக்கான தமிழ் அருஞ்சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பது வாசிப்பை மேலும் எளிமைப்படுத்துகிறது.

கண்ணுக்கு புலப்படாமலேயே நம்மை காப்பதால் சிறுநீரகங்களும் கடவுள்தான் என்ற உண்மையை உணர்த்துகிறது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com