பக்தி நூல்கள், சமூக நாவல்களுக்கு அதிக வரவேற்பு!

சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பபாசியின் 47-ஆவது புத்தகக்காட்சியில் பக்தி நூல்கள் மற்றும் சமூகம் சார்ந்த நாவல்களுக்கு
பக்தி நூல்கள், சமூக நாவல்களுக்கு அதிக வரவேற்பு!

சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பபாசியின் 47-ஆவது புத்தகக்காட்சியில் பக்தி நூல்கள் மற்றும் சமூகம் சார்ந்த நாவல்களுக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பிருந்ததாக பதிப்பாளர்கள் கூறுகின்றனர். 
சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி புத்தகக் காட்சி தொடங்கியது. புத்தகக் காட்சியில் தினமும் மாலை உரையரங்கம், புத்தக வெளியீடு உள்ளிட்டவையும் நடைபெற்றன. கடந்த 8-ஆம் தேதி மழை காரணமாக புத்தகக்காட்சிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாக இவ்வாண்டு புத்தகக்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், குழந்தைகளுக்கான பாட நூல்கள், மொழி ஆய்வு நூல்கள் என லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. ராமர் குறித்த பல புதிய நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளதைக் காண முடிந்தது.
அவற்றில் பக்தி சார்ந்த நூல்கள் அதிகமாக விற்பனையாகின. மகளிர் நலன் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் அறிவு மேம்பாடு தொடர்பான நூல்களும் அதிக அளவில் விற்றுள்ளன. 
வரலாற்று அடிப்படையிலான சமூக நாவல்களை இளைஞர்கள் அதிகம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் அதிகமாக விற்றுள்ளதாக பதிப்பகத்தார் தெரிவித்தனர்.
மக்கள் வாழ்க்கை சார்ந்த இலக்கிய, வரலாறு, புனைவு நூல்கள் கடந்த புத்தகக்காட்சிகளை விட தற்போது அதிகம் விற்றது என்றும் தெரியவந்துள்ளது.

புத்தகக் காட்சியில் நூல்கள் வெளியீடு
சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் இரு நூல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. வெற்றிமொழிப் பதிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வெளியீட்டாளர் இரா.
தமிழ்தாசன் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் மு.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். சான்றோர் இனத்திரு நூலின் முதல்பிரதியை கவிஞர் அமுதபாரதி வெளியிட, பேராசிரியர் ஷோபா ஸ்டீபன் பெற்றுக் கொண்டார். 
சரித்திர தேர்ச்சி கொள் எனும் நூல் முதல் பிரதியை நக்கீரன் கோபால் வெளியிட கவிஞர் ஜெயபாஸ்கரன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நூல்களின் ஆசிரியர் ஜா.சலேத், கவிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com