இந்திய ஏவுதளங்கள்

இந்திய ஏவுதளங்கள்

இந்திய ஏவுதளங்கள் - நெல்லை சு.முத்து; பக்.104; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆044- 2434 2810.

விண்வெளித் துறையில் 38 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்று, அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் நூலாசிரியரின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

திருவனந்தபுரத்தில் தும்பா ஏவுதளம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம், மகேந்திரகிரியில் திரவ உந்து எரிபொருள் வளாகம், பாலாசூர் ஏவுதளம், குலசேகரப் பட்டினம் ஏவுதளம் ஆகிய 5 இந்திய ஏவுதளங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் விரிவாக, எளிய தமிழில் நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். அவை தோன்றிய விதம், விஞ்ஞானிகள், ஏவப்பட்ட ஏவுகணைகள், சிறப்புகள், வரைபடங்கள் என நூலாசிரியர் நல்லதொரு முறையில் விவரித்துள்ளார். தகவல்களுக்கான உரிய, அரிய புகைப்படங்கள் பக்கம்தோறும் காணப்படுகின்றன.

விண்வெளித் துறை தொடர்புடைய நாற்பது நூல்களை எழுதியவர் நூலாசிரியர். ஏவுதளங்களைப் பற்றிய சிறப்பான புரிதலை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான இவரைத் தவிர வேறு யாராலும் சிறப்புற விரிவான தகவல்களுடன் எடுத்துரைக்க முடியாது என்பதே உண்மை.

மூத்த விஞ்ஞானிகளான டாக்டர் அப்துல் கலாம், ஆராவமுதன், ராஜன் உள்ளிட்டோருடன் பணியாற்றியவர், ஆலோசித்து, தரவுகளைச் சேகரித்து எழுதியிருப்பது நூலுக்கு மெருகு சேர்க்கிறது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, ஜப்பான், ஈரான், கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள ஏவுதளங்கள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.

அறிவியல், விண்வெளித் துறையினர் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com