வாழ்ந்து காட்டியவர்கள்

வாழ்ந்து காட்டியவர்கள்

வாழ்ந்து காட்டியவர்கள், கே.சந்திரசேகரன், பக்.306, விலை ரூ.275, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600014, தொலைபேசி- ✆ 044-28132863, 43408000.

உலகளவில் ஏராளமான சாதனையாளர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். என்றாலும் அவற்றில் 50 பேர்களின் வரலாற்றை கட்டுரைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

இந்த நூலில் உள்ள வரலாற்றுச் செய்திகள் சுவையானவை; சுருக்கமானவை. ஆனால் மிகவும் இன்றியமையாதவை. முதுமைக்காலம் வரைக்கும் வாழ்ந்து சாதித்தவர்களின் வரலாறுகளும் இதில் உண்டு; மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்து விளங்கி முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களின் வரலாறும் உண்டு.

சாதனையில் தொடங்கி பொதுவுடைமை சிற்பி கார்ல் மார்க்ஸ், ஜவாஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர், லீ குவான் யூ, சேகுவேரா, சர் சி.வி.ராமன், தமிழறிஞர் மறைமலை அடிகள், அலெக்சாண்டர், தாமஸ் ஆல்வா எடிசன், பெரியார், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, மு.கருணாநிதி, என பட்டியல் நீண்டுள்ளது.

முதல் கட்டுரை மகாத்மா காந்தி குறித்து பேசுகிறது. எந்த உயர் பதவிகளையும் வகிக்காமல் உலகளவில் புகழ் பெற முடியும், தலைவராக உருவாக முடியும் என நிரூபித்து 'மகாத்மா' என்ற பெருமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவரது போராட்டங்களையும், வாழ்க்கையையும் எடுத்தியம்புகிறது.

கடைசி கட்டுரையில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இடம் பெற்றிருக்கிறார். அவர் விதைத்துவிட்டுப் போயிருக்கும் பாரம்பரிய விவசாயம் என்கிற உழவு வாழ்க்கை தமிழகத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுருக்கமாக கூறுகிறது. உலக அளவில் தலைவர்களின் சாதனை குறித்து எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலை இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com