திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் - சோமலெ; பக்.434; ரூ.480; காவ்யா, சென்னை - 24; ✆ 98404 80232.

உலகில் தமிழர்கள் வசிக்குமிடங்களில் புகழப்படுவது திருநெல்வேலி. தென்பாண்டி நகரத்தின் தலைநகரமும்கூட. பொதிகையில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிவடையும் இந்தச் சீமை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என்று மூன்று மாவட்டங்களாக உள்ளடக்கியது.

திருநெல்வேலியின் அறிமுகம், வரலாறு, வாழும் மக்கள், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வணிகம், கூட்டுறவு இயக்கம், போக்குவரத்து வசதிகள், ஆட்சி முறை, விடுதலை இயக்கம், தமிழ்ப்பணி, கல்வி நிலை, கலை வளர்ச்சி, மருத்துவ வசதிகள், முக்கிய ஊர்களின் அறிமுகம் என்று 15 தலைப்புகளில் திருநெல்வேலியின் தோற்றம் முதல் இன்று வரையிலான தகவல்களை ஒற்றை நூலில் அறியும் வகையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே தொகுத்திருப்பதில் நூலாசிரியரின் உழைப்பு தென்படுகிறது.

தொன்மையான நாகரிகத்துக்கும், பேராண்மைக்கும், சுதந்திர வேட்கைக்கும், தியாகச் செம்மைக்கும், தமிழின் நயத்துக்கும், புதுமை வளர்ச்சிக்கும் விளைநிலமான திருநெல்வேலியின் பெருமைகளை, சாதனைகளை, அந்த ஊரின் சிறப்புகளை, தொழில்களை, மக்களின் வாழ்வியல்களை, வழிபாட்டுத் தலங்களை, ஆன்மிகவியலாளர்களை, பெருமைப்படுத்தியவர்களை... என்று பலவகைகளில் நூலாசிரியர் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

நீர்நிலைகள், வழிபாட்டுத் தலங்கள், ஒவ்வொரு பகுதிகளின் முக்கியத்துவம் குறித்த விவரங்கள் இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டுதல்தான். திருநெல்வேலி சீமை மக்கள் மட்டுமல்ல; தமிழ்கூறும் நல்லுலகமே வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com