தீபம் நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் - ஆய்வு

தீபம் நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் - ஆய்வு

தீபம் நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் - ஆய்வு - முனைவர் க.ர.லதா; பக்.216; ரூ.250; சாரதா பதிப்பகம், சென்னை- 14; ✆ 9790706548.

தமிழ் எழுத்துலகில் கடந்த நூற்றாண்டின் இறுதி காலாண்டில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர் நா.பார்த்தசாரதி. சரித்திர, சமூக நாவல்கள் சுமார் 50; 19 சிறுகதை தொகுதிகள்; நாடகங்கள், பயண நூல்கள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நா.பா.வின் படைப்புகள் பிரமிக்க வைப்பவை. காலத்தையொட்டி எழுதப்பட்ட

இவரது எழுத்துகள் இன்றும் நூதனமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

தமிழ் இதழ்களில் பணியாற்றிக் கொண்டும் படைத்துக் கொண்டும் இருந்தபோதே தீவிர தமிழ் இலக்கிய படைப்புகளுக்கென 'தீபம்' என்ற இதழையும் இரு பதிற்றாண்டு காலம்

சமரசமின்றி தொடர்ந்து நடத்தி வந்த நா.பா. வாழ்ந்திருந்த காலம் வெறும் 55 ஆண்டுகள். நா.பா.வின் சிறுகதைகளை மட்டும் பொருளாக எடுத்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் முனைவர் க.ர.லதா. கருப்பொருள், படைப்புத் திறன், மொழிநடை, சமுதாயச் சிந்தனை உள்ளிட்ட அம்சங்களை பகுப்பாய்ந்து இந்த ஆய்வை திறம்பட மேற்கொண்டுள்ளார். இலக்கிய நயம் நிறைந்த நடையால் தனியிடம் பெற்ற நா.பா. சிறிய செய்திகளையும் உவமை நயத்துடன் கூறி கதைக்கு மெருகூட்டுவார். தனக்கு கிடைத்த அனுபவங்களைப் பக்குவப்படுத்தி இலக்கியம் படைத்தார்.

தமிழ் சிறுகதை இலக்கியத்தில் நா.பா.வின் பங்கு கணிசமானது. சமகால சமூகம், அரசியல், வரலாற்று நிகழ்வுகள், சங்க கால காட்சிகள் என அவருடைய கதைக்களம் மிகப் பரந்தது. கருப்பொருள் தேர்விலும் கதை அமைப்பிலும் மொழிநடையிலும் சிறுகதைக் கலை சிறந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் அழுத்தமாக நிலைநாட்டியுள்ளார். படிக்கச் சுவையாகவும் நா.பா. எழுத்துகளின் மறுவாசிப்புக்கு தூண்டுவதாகவும் அமைந்துள்ள நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com