ஆழ்கடலில் சாகசப் பயணம்

ஆழ்கடலில் சாகசப் பயணம்

ஆழ்கடலில் சாகசப் பயணம் - ஜூல் வேர்ன் (தமிழில் - விஜயஸ்ரீ சிந்தாமணி); பக்.560; ரூ.600; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044- 4200 9603.

"அறிவியல் புனைக் கதைகளின் தந்தை' என அழைக்கப்படும் பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல் வேர்னின் "ட்லெண்டி தெüசண்ட் லீக்ஸ் அண்டர் தி சீ' என்ற நூலின் மொழி பெயர்ப்பு. 1880-களில் நடப்பதுபோன்று நாவல் எழுதப்பட்டுள்ளது. கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் திடீர், திடீரென தாக்கப்படுகின்றன. நினைத்துப் பார்க்க இயலாத வகையிலான சேதத்தைக் கப்பல்களுக்கு ஏற்படுத்தும் மர்மம் என்ன என்பதுதான் கதைக்களம்.

ஆழ்கடலில் அச்சுறுத்தும் மர்ம உருவத்தை தேடி அமெரிக்காவின்"ஆபிரகாம் லிங்கன்' கடற்படை கப்பல் புறப்படுகிறது. இந்தப் பயணத்தில் இடம்பெறும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியின் பார்வையில் நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடல், செங்கடல், மத்திய தரைக் கடல், அட்லாண்டிக் கடல் என உலகத்தையே கடல்வழியாகச் சுற்றும் இந்தப் பயணத்தின்போது, கிடைத்த அனுபவங்கள் விறுவிறுப்பான காட்சித் தொகுப்புகளாக கண் முன்னே விரிகின்றன.

கப்பல்களைத் தாக்கும் மர்ம உருவம் கடல் திமிங்கிலமா, பேய் மீன்களா, கடல்பூதமா என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் மர்மம் வெளிப்பட்டு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. வெறும் சாகசத்தோடு இல்லாமல், துல்லியமான அறிவியல், புவியியல் தகவல்களும் சேர்த்து ரசிக்க வைக்கிறது. நூலைப் படிக்கும்போதே, திரைப்படத்தைப் பார்ப்பதுபோன்ற பிரமிப்பு ஏற்படுகிறது. வரிக்கு வரி வார்த்தை ஜாலம். சாகச நாவல் வாசகர்களுக்கு இந்த நூல் நல்லதொரு அனுபவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com