அம்மா ஆங் சான் சூச்சி

அம்மா ஆங் சான் சூச்சி

அம்மா ஆங் சான் சூச்சி (மியான்மர் வரலாற்று நூல்)- இரா. உதயபாஸ்கர்; பக். 224; ரூ.300; அசோக்குமார் பதிப்பகம், சென்னை- 51; ✆ 99406 78478.

தென்கிழக்காசிய நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, மியான்மரும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த நாடுதான். 1948 ஜனவரி 4-இல் மியான்மர் சுதந்திர நாடாகி, நாடாளுமன்ற அரசியல் சட்டம் உள்ளது.

130-க்கும் மேலான இனக் குழுக்கள், ஐராவதி நதி, கலாசாரம், தண்ணீர் பண்டிகை, பெண்களின் யெய்ன் நடனம், தமிழர்களைப் போன்று சந்தனம் பூசிக் கொள்ளும் வழக்கம் இருப்பது போன்ற ருசிகரமான தகவல்கள் நூலில் விரவிக் கிடக்கின்றன.

பெகான் பேரரசு ஆட்சி முதல் ஆங்சான் சூச்சி வரையிலான வரலாற்று நிகழ்வுகள், மாண்டலே சிறையில் திலகர், நேதாஜி அடைக்கப்பட்டது இந்தியாவின் ரத்தினகிரியில் மியான்மர் பேரரசர் தீ.பொ.மின் வாழ்ந்தது உள்ளிட்ட பல தகவல்கள் படிப்பதற்கு சுவாரசியத்தை தருகின்றன.

1962-ஆம் ஆண்டு முதல் 1974 வரை ராணுவ ஆட்சி, பிறகு 1988 வரை சர்வாதிகார ஆட்சி, மாணவர் புரட்சி, அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து மியான்மர் திரும்பிய ஆங் சான் சூச்சி பிறகு 1990-இல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றும் ராணுவத்தால் சிறைவைப்பு, அவர் 1991-இல் நோபல் பரிசு பெறுதல் என்று வரலாறு தகவல்கள் இடம்பெறுகின்றன.

2015-இல் ஆங் சான் சூச்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, அவரது கட்சி ஆட்சி அமைத்து அரசின் முன்னவர் ஆகிறார். மீண்டும் ராணுவ ஆட்சி 2021-இல் அமலாகி, சூச்சி சிறை வாழ்க்கையை அனுபவிக்கிறார் வரையிலான தகவல்கள் இடம்பெறுகின்றன. வரலாறு, அரசியல் ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com