தேன்கூடு

அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.
தேன்கூடு
Published on
Updated on
1 min read

தேன்கூடு - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.144, ரூ.140, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-17, ✆ 97910 71218.

மனிதனுக்கு உழைப்பின் மேன்மையை உணர்த்தும் தேனீக்கள் போன்று, தான் அறிந்த பல்வேறு வெற்றிக் கதைகளை சிறு கட்டுரைகளாகப் படைத்துள்ளார் நூலாசிரியர். இந்த நூலில் இடம்பெற்றுள்ள 50 கட்டுரைகளும் சுயமுன்னேற்றத்தை வலியுறுத்துகின்றன. கட்டுரைகள் ஒவ்வொன்றும் படிப்பவர்களுக்கு அதுதொடர்பான ஒரு சிந்தனைச் சங்கிலியை உருவாக்குகிறது.

டாடா நிறுவனம் உப்பு வணிகம் தொடங்கியதை விளக்கும் 'வாய்ப்பு', சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதை வலியுறுத்தும் 'மீட்சி', சொற்களின் வலிமையை உணர்த்தும் 'சொல்', என

ஒவ்வொரு கட்டுரையிலும் நூலாசிரியரின் வித்தியாசமான பார்வையை காண முடிகிறது. ஒரு மாதுளை பழத்தைப் பிரித்தால் ஒவ்வொரு கண்ணியிலும் ஒரு மணி இருப்பது போல், நூல் முழுவதும் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளும், சிந்திக்கவைக்கும் செய்திகளும் விரவிக் கிடக்கின்றன.

பெரும்பாலான கட்டுரைகள் மிகப்பெரிய தகவல்களை கொண்டிருந்தாலும், அதை சிறு குழந்தைகளும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் சுருங்கச் சொல்வதில் நூலாசிரியர் வெற்றி கண்டிருக்கிறார். குறிப்பாக 'அறிவுரை' எனும் கட்டுரையில் இன்றைய வாழ்வின் எதார்த்தத்தை தனது வாழ்க்கைப் பாடம் மூலம் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். அதுபோல், 'அற்புதம்' எனும் மற்றொரு கட்டுரையில் ஹிந்து மத சடங்குகளின் பின்னுள்ள அறிவியலை விளக்கியுள்ளார். ஒரு வார்த்தையில் தொடங்கும் கட்டுரை வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு தகவல்களை தருகிறது. அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.