கவனத்தில் கவனம்

ஒருவரை ஊக்கப்படுத்தும் பல்வேறுகோணங்களையும் வழிமுறைகளையும் தக்க உதாரணங்களோடு எளிமையாக விளக்குகிறது இந்நூல்.
கவனத்தில் கவனம்
Published on
Updated on
1 min read

கவனத்தில் கவனம்: சோம. வள்ளியப்பன்; ரூ.150; பக்.128; கிழக்கு பதிப்பகம்; சென்னை - 14; ✆ 9500045609.

தடையேதுமில்லை, உயர உயர, உச்சம் தொடு உள்ளிட்ட எழுத்தாளர் சோம. வள்ளியப்பனின் சுயமுன்னேற்ற நூல் வரிசையில் அடுத்த முக்கிய நூலாக கவனத்தில் கவனம் இடம்பெற்றுள்ளது. வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகளையும், சிக்கலான சூழ்நிலைகளை கையாளும் வழிகளையும் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

சிறிய முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை அடைய முடியும் என்பதை சின்னக் காலடிகளா, பெரும்தாவலா? எனும் அத்தியாயம் விளக்குகிறது. பணியிடத்தில் வெற்றி பெறுவதன் அவசியத்தை விளக்கும் 'ஆரம்பத்திலேயே செய்துவிடுங்கள்', முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை விளக்கும் 'திறன் பிறப்பினாலா முயற்சியினாலா' உள்ளிட்ட அத்தியாயங்கள் வெற்றியின் மந்திரங்களாக உள்ளன.

அதேநேரத்தில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் வாழ்வதற்கான இலக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அவசியத்தையும் நூலாசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்று எட்டுத்திக்கும், நாளை முக்கியம் இன்று..?, கேளுங்கள் தரப்படும், மனதையும் பழக்கலாம் உள்ளிட்ட 27 அத்தியாயங்கள் வாழ்க்கையைப் புதிய பார்வையுடன் அணுகத் தூண்டுகிறது. அதேநேரத்தில், ஒருவரை ஊக்கப்படுத்தும் பல்வேறுகோணங்களையும் வழிமுறைகளையும் தக்க உதாரணங்களோடு எளிமையாக விளக்குகிறது இந்நூல். வாழ்வில் சாதிக்க துடிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய நூலாக 'கவனத்தில் கவனம்' அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com