என்ன செய்யப் போகிறோம்?

சமூகவியல், சுற்றுச்சூழலியல் சார்ந்து அறிய விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.
என்ன செய்யப் போகிறோம்?
Published on
Updated on
1 min read

என்ன செய்யப் போகிறோம்?: இரா. கற்பகம்; பக்.156; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; ✆ 044-26359906.

சுற்றுச்சூழல், சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது படைப்பின் நியதி. ஆறறிவு பெற்ற மனிதர்கள் இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றாததால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளை கட்டுரைகள் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.

அதிலும், சுற்றுச்சூழல் பிரச்னைகளாக காட்டுத்தீ, நீர் மேலாண்மை, வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு குறித்த கட்டுரைகள் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தற்போதைய நவீன உலகிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை 'சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை' எனும் கட்டுரை விளக்குகிறது. 'பெண்ணுரிமை முழுமை அடைய', 'பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன?', 'பெண்களின் நிலை மேம்படுமா?' ஆகிய கட்டுரைகள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் எடுத்துக் கூறுகிறது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இளம் தலைமுறையினரின் தடுமாற்றங்கள், குடும்ப உறவில் முதியோரின் பங்கு, புலம்பெயர்தலால் ஏற்படும் கலாசாரப் பாதிப்புகள் உள்ளிட்ட கட்டுரைகள், சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுகின்றன. சமூகவியல், சுற்றுச்சூழலியல் சார்ந்து அறிய விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com