
வேதாளம் - கே.ஜி.ஜவர்லால்; பக்.168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை - 600 014. ✆ 044-42009603.
உலகப் புகழ்பெற்ற ஒன்பது எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 சிறுகதைகளின் தமிழாக்கமே இந்நூல்.
மாப்பாஸôன் (2), ஆன்டன் செக்காவ் (2), ஸ்டாக்டன் (1), எட்கர் ஆலன் போ (2), கேத் சோப்பின் (1), ஓ.ஹென்றி (6), ஜாக்வஸ் ஃப்யுட்ரெல் (1), ஆர்தர் கானன் டாயில் (1), ஜாய்ஸ் கில்மர் (1) ஆகியோரின் கவனம் ஈர்த்த சிறுகதைகளை வரிக்கு வரி மொழியாக்கம் செய்யாமல், தேவையான இடங்களில் நீக்கம், சேர்ப்பு செய்யப்பட்டு தமிழ் வாசகர்களுக்கு ஏற்றாற்போல, அதேநேரத்தில் கதையின் போக்கும் முடிவும் மூலக்கதையின் பிரகாரம் இருப்பதே இந்நூலின் சிறப்பு.
பொதுவாக உலக இலக்கியம் என்றாலே சலிப்பூட்டக் கூடிய, கடினமான மொழிபெயர்ப்பில், தத்துவார்த்தமான கதைகள் கொண்டவை என்ற பெரும்பான்மை எண்ணங்களுக்கு மாறாக ஒவ்வொரு சிறுகதையும் விறுவிறுப்புடன் நகர்கிறது.
இதில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் சற்றேறக் குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு, அல்லது அதற்கும் முன்பு எழுதப்பட்டவை. இப்போது வாசித்தாலும் ஒவ்வொரு கதையின் முடிவும் இன்றைக்கும் ரசிக்கத்தக்க விதத்தில் இருப்பது சிறப்பு.
திகில், மர்மம், நகைச்சுவை, தத்துவம், விறுவிறுப்பு என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கத்தக்க விதத்தில் தேர்ந்தெடுத்திருக்கும் நூலாசிரியரின் இலக்கிய ரசனை பாராட்டத்தக்கது.
நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட உலக சிறுகதைகளை சமகாலத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பது, வாசகர்களின் ஆர்வத்தை உலக இலக்கியத்தின் மீது திருப்பும் முயற்சியாக இப்புத்தகம் திகழ்கிறது. அதில் தொகுப்பாசிரியர் வெற்றியும் பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.