33. அரியானை அந்தணர் - பாடல் 7

வரும் பயனை என்ற சொற்களை, எழுநரம்பின் ஓசையானை என்ற சொற்களுக்கு அடுத்து வைத்து பொருள் கொள்ள வேண்டும். யாழ், வீணை முதலிய கருவிகளின் நரம்பிலிருந்து எழுவது ஓசை, அந்த ஓசையால் விளைவது பண்; பண்ணால் விளைவது மனத்திற்கு இன்பம்.

பாடல் 7

வரும் பயனை எழுநரம்பின் ஓசையானை வரை சிலையா
வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம் செய அவுணர் புரம் எரியக் கோத்த அம்மானை
அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னைச்
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

வரும் பயனை என்ற சொற்களை, எழுநரம்பின் ஓசையானை என்ற சொற்களுக்கு அடுத்து வைத்து பொருள் கொள்ள வேண்டும். யாழ், வீணை முதலிய கருவிகளின் நரம்பிலிருந்து எழுவது ஓசை, அந்த ஓசையால் விளைவது பண்; பண்ணால் விளைவது மனத்திற்கு இன்பம்.

வானவர்கள் முயன்ற வாளி, என்று திருமால் அம்பாகவும், காற்றுக் கடவுள் சிறகாகவும், தீக்கடவுள் அம்பின் முனையாகவும் பங்கெடுத்துக் கொண்ட செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய வல்லமை வாய்ந்த அம்பு இருப்பினும், அந்த அம்பினைப் பயன்படுத்தாமல், தனது சிரிப்பு ஒன்றினால் மூன்று கோட்டைகளையும் எரித்தவர் சிவபெருமான். எனவேதான் கோத்த என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இந்த தகவல் பல திருமுறைப் பதிகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாசகத்தில் திருவுந்தியார் பதிகத்தில் மிகவும் சுவைபட மணிவாசகர் இதனை கூறுகின்றார். வல்லமை வாய்ந்த அம்பு என்பதால், ஒரே ஒரு அம்புடன் போருக்குச் செல்லும் சிவபெருமான், அந்த ஒரு அம்பும் தனக்கு மிகை என்பதை உணர்த்தினார் என்று கூறுகின்றார்.

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்

ஓரம்பே முப்புரம் உந்தீ பற

ஒன்றும் பெருமிகை உந்தீ பற

சம்பந்தர் ஆமாத்தூர் பதிகத்தின் முதல் பாடலில், வில்லாக மேருமலை, வில்லின் நாணாக வாசுகி பாம்பு, திருமால், அக்னி, வாயு ஆகிய மூவரும் மூன்று பாகங்களாக ஏற்ற அம்பு, இவை அனைத்தையும் கொண்டு எவ்வாறு நீர், முப்புரங்களை வென்றீர் எனக்கு சொல்லும் என்று வேண்டுகின்றார். அதாவது மேலே சொல்லப்பட்ட வலிமை வாய்ந்த சாதனங்கள் இருந்தும் அவைகளை பயன்படுத்தாத காரணம் என்ன என்று கேட்கின்றார். இந்த பதிகம் இரண்டாம் திருமுறையின் ஐம்பதாம் பதிகம்.

குன்றவார் சிலை நாண்அரா வரிவாளி கூரெரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடையேறும் வேதியனே

தென்றலார் மணிமாடமாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல்

அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.

பொழிப்புரை

நரம்பிசைக் கருவிகளிலிருந்து எழும் இனிய ஓசையாகவும், அந்த ஓசைகள் சேர்ந்த இனிய பண்ணாகவும் உள்ளவன் சிவபெருமான். தேவர்களுக்கு கொடிய அச்சத்தை விளைவித்த, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளை எரிப்பதற்காக, திருமால், அக்னி, வாயு ஆகியோர் பங்கேற்ற வல்லமை வாய்ந்த அம்பு தன்னிடம் இருப்பினும், அதனை பயன்படுத்தாமல், தனது சிரிப்பு ஒன்றினால் மூன்று கோட்டைகளையும் அழித்த வல்லமை கொண்டவன் சிவபெருமான். அலைகடலில் தோன்றிய விடத்தைக் கண்டு அனைவரும் பயந்து ஓடியபோது, தயக்கம் ஏதும் இல்லாமல் அதனை உண்டு, அனைவரையும் காப்பாற்றியவன் சிவபெருமான். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த மங்கையர்களின் ஆசைப் பார்வைகளில் சிக்காமல் உறுதியான உள்ளம் கொண்ட பெரியோர்களின் உள்ளங்கள் அடையும் பெரும்பயனாக விளங்குபவன் சிவபெருமான். இவ்வாறு வல்லமையும் கருணை உள்ளமும் ஒருசேரக் கொண்டுள்ள இறைவனாகிய சிவபெருமான் பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தலத்தில் உறைகின்றான். அவனது புகழைப் பற்றி பேசாத நாட்கள் வாழ்ந்த நாட்களாகக் கருதப்படுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com