சுடச்சுட

  
  தேவாரம்

  பாடல் 8:

      வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய்
          விகிர்தா உயிர்கட்கு அமுது
      ஆயினாய் இடுகாட்டு எரி
          ஆடல் அமர்ந்தவனே    
      தீயினார் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய்
           திகழ்கின்ற சிற்றம்பலம்
      மேயினாய் கழலே தொழுது எய்துதும் மேல் உலகே 

  விளக்கம்:

  வேயின்=மூங்கில் போல்; ஆர்=பொருந்திய; பணைத்தோளி=திரண்ட தோள்களை உடைய உமை அன்னை; 

  பொழிப்புரை: 

  மூங்கில் போன்று பருத்து திரண்டு அழகிய தோள்களை உடைய காளி தேவியுடன் நடனம் ஆடுவதை விரும்பியவனே, ஏனைய தேவர்களிடமிருந்து மாறுபட்டவனே, உயிர்களுக்கு அமுதமாக பல நன்மைகளை செய்பவனே, இடுகாட்டின் தீயினில் உகந்து நடனம் ஆடுபவனே, தீக்கடவுளை கூர்மையான முனையாகவும் திருமாலினைத் தண்டாகவும் காற்றினை சிறகுகளாகவும் கொண்ட அம்பினை எய்தி பறக்கும் மூன்று கோட்டைகளையும் தீ மூட்டி அழித்தவனே, அழகுடன் சிறந்து விளங்கும் சிற்றம்பலத்தினை திருநடனம் ஆடும் அரங்காகக் கொண்டவனே, உனது திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் மேலான உலகமாகிய சிவலோகத்தினை அடைவார்கள்.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai