சுடச்சுட

  
  தேவாரம்

   

  பாடல் 10:

      குண்டர் தேரருக்கு
      அண்டன் அன்னியூர்த்
      தொண்டுளார் வினை
      விண்டு போகுமே

  விளக்கம்:

  அண்டன்=அண்ட முடியாதவன், நெருங்க முடியாதவன்; குண்டர்=பருத்த உடலைக் கொண்ட சமணர்கள்; தேரர்=புத்தர்; சிறிய விதையிலிருந்து பெரிய மரங்கள் வளர்வது போன்று, நமது கண்ணுக்கு தெரியாமல் நம்முடன் பிணைந்திருக்கும் வினைகள், நாம் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க காரணமாக உள்ளன. விண்டு போகும் விதைகள் செயலற்று போவது போல், பெருமானின் அருளினால் அவனது அடியார்களை பிணைந்துள்ள வினைகள் செயலற்று விடுகின்றன என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.  

  பொழிப்புரை:

  பருத்த உடலை உடைய சமணர்களும் புத்தர்களும் அண்ட முடியாதவனாக விளங்கும் பெருமானுக்கு அன்னியூர் தலத்து இறைவனுக்கு தொண்டு செய்யும் அன்பர்களின் வினைகள்  விண்டு போய்விடும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai