முகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்
135. மன்னியூர் இறை - பாடல் 3
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 30th July 2019 12:00 AM | Last Updated : 30th July 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 3:
நீதி பேணுவீர்
ஆதி அன்னியூர்
சோதி நாமமே
ஓதி உய்ம்மினே
விளக்கம்:
நீதி=நியதி, வழிபாட்டு முறைகள்; நீதி பேணுதல்=வழிபாட்டு முறைகளில் ஒழுகுதல்; பெருமானைக் கண்டு தொழுத பின்னர் அவனது திருநாமங்களை சொல்வது தானே முறை.
பொழிப்புரை:
வேதங்களிலும் ஆகம நூல்களிலும் சொல்லிய வண்ணம் முறையாக பெருமானைத் தொழும் அன்பர்களே, நீவிர் அனைவரும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும் சுயமாக ஒளி வீசுபவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களை ஓதி உய்வினை அடைவீர்களாக.