124. வரமதே கொளா - பாடல் 9

அரசனாகிய இராவணனின்
124. வரமதே கொளா - பாடல் 9


பாடல் 9:

    பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நன் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
    சண்பை ஆதியைத் தொழும் அவர்களைச் சாதியா வினையே

விளக்கம்:

பண்பு=பெருமை; சண்பை என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ண், பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது  

பொழிப்புரை: 

பெருமைகள் பல உடைய இலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரித்த பெருமான் சண்பை என்று அழைக்கப்படும் நகரத்தில் உறைகின்றான். அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகத் திகழும் இறைவனைத் தொழும் அடியார்களச் சார்ந்துள்ள தீய வினைகள் செயலற்று வலிமை இழந்து காணப்படும். எனவே அத்தகைய வினைகளால் அவர்களுக்கு தன்பம் ஏதும் ஏற்படாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com