Enable Javscript for better performance
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 7- Dinamani

சுடச்சுட

    

    141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 7

    By என். வெங்கடேஸ்வரன்  |   Published on : 09th October 2019 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவாரம்


    பாடல் 7:

        கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார் தமக்கு
        உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
        திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
        அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே

    விளக்கம்:

    இந்த பாடலில் பெருமானின் அடையாளங்களில் கோவணமும் ஒன்று என்பது உணர்த்தப் படுகின்றது. கரைதல்=தேய்தல், வருந்துதல், ஊனம்=குற்றம், குறைவு; கரைதல் என்ற சொல்லுக்கு குற்றம் என்றும் ஒரு பொருள் உள்ளது. இந்த பொருளினை உணர்த்துவதாக கொண்டு, பெருமானின் அடையாளங்கள் குற்றம் ஏதுமின்றி குணங்களுடன் திகழ்வதாக அளிக்கப்படும் விளக்கமும் பொருத்தமே.   
     
    பொழிப்புரை:

    பெருமானின் திருவேடங்களை மனதினில் தியானிக்கும் அடியார்களுக்கு வருத்தம் ஏதும் ஏற்படுவதில்லை. அந்த திருவேடங்களின் பெருமையை எடுத்துரைக்கும் அடியார்களுக்கு வாழ்வினில் குறையேதும் ஏற்படுவதில்லை; அவர்கள் உலகினில் நிலையான புகழுடன் வாழ்வார்கள். இவ்வாறு அடியார்களை சிறப்பாக வாழவைக்கும் தன்மை கொண்ட அடையாளங்களை பெற்றுள்ள இறைவன், அலைகள் பொங்கியெழும் வண்ணம் நீர்ப்பெருக்கினை உடைய திருந்துக்தேவன்குடி தலத்தில் வீற்றிருக்கின்றான். அவன் தனது இடுப்பினில் வெண்மை நிறம் கொண்ட கோவணத்தை அணிந்துள்ளான்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai