கற்கண்டு பொங்கல்

நாவில் நடனமாடும் கற்கண்டு பொங்கல் செய்தால் நிமிடத்தில் காலியாகிவிடும்.
கற்கண்டு பொங்கல்
கற்கண்டு பொங்கல்

நாவில் நடனமாடும் கற்கண்டு பொங்கல் செய்தால் நிமிடத்தில் காலியாகிவிடும்.

தேவையானவை: 

கற்கண்டு - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
நெய் - 300 மில்லி
பால் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிதளவு

செய்முறை:

பச்சரிசியை பால், தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்.

சர்க்கரையையும் கற்கண்டையும் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

பின்னர் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து பொங்கலுடன் சேர்த்து கற்கண்டு பாகு ஏலக்காய்த் தூள், நெய் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

- ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com