மெல்போர்னில் வார்னேவுக்கு சிலை

மெல்போர்ன், டிச.26: ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு மெல்போர்ன் மைதானத்தின் வெளிப்புறத்தில் சிலை அமைக்க மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காக அவ
Published on
Updated on
1 min read

மெல்போர்ன், டிச.26: ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு மெல்போர்ன் மைதானத்தின் வெளிப்புறத்தில் சிலை அமைக்க மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காக அவர் அளித்துள்ள சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவரை கௌரவிக்கும் வகையில் சிலை அமைக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மைதானத்தின் வெளிப்புறத்தில் கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேன் உள்ளிட்ட 10 விளையாட்டு பிரபலங்களுக்கு ஏற்கெனவே சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அங்கு வார்னேவின் சிலை அமைக்க  முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது மெல்போர்ன் கிரிக்கெட் கிளப். அடுத்த ஆண்டின் கடைசிக்குள் சிலை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்போர்னில் பிறந்தவரான ஷேன் வார்னே, அங்கு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் தலைவர் டேவிட் மெக்லிஜான் கூறுகையில், "ஈடு இணையற்ற சாதனைகளைப் படைத்துள்ள வார்னேவுக்கு ஏற்கெனவே 10 விளையாட்டு பிரபலங்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிலை அமைக்கப்படும்' என்றார்.

2007-ல் ஆஷஸ் தொடரோடு வார்னே ஓய்வுபெற்றார். அவர் 145 டெஸ்ட் போட்டியில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டியில் 293 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com