மும்பை 211 ரன் முன்னிலை

மைசூர், ஜன. 12: ரஞ்சி டிராபி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. கர்நாடகம், மும்பை அணிகளுக்கு இடையேயான ரஞ்சி

மைசூர், ஜன. 12: ரஞ்சி டிராபி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

கர்நாடகம், மும்பை அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி சூப்பர் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் மைசூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்களுடன் முதல் இன்னிங்ûஸ செவ்வாய்க்கிழமை தொடர்ந்த கர்நாடகம் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடக்க வீரர் பவன் 33 ரன்களும், உத்தப்பா (9), வினய் குமார் (2), சதீஷ் (10), பாண்டே (0), அமித் வர்மா (8), கெüதம் (16), பின்னி (13), ஜோஷி (17), மிதுன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை தரப்பில் அவிஷ்கர் சால்வி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மும்பை 2-வது இன்னிங்ûஸ தொடர்ந்தபோது, குக்ரேஜா 13 ரன்களுக்கும், வாசிம் ஜாபர் (8), ரஹானே (4), கான்வில்கர் (0), சமந்த் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அபிஷேக் நாயர் 32 ரன்களுடனும், தவல் குல்கர்னி 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னமும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் மும்பை 211 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்:

மும்பை: 79 ஓவர்களில் 233 & 38 ஓவர்களில் 108-5 (தவல் குல்கர்னி 35 பேட்டிங், அபிஷேக் நாயர் 32 பேட்டிங், மிதுன் 4-39).

கர்நாடகம்: 49.3 ஓவர்களில் 130 (பவன் 33, சால்வி 5-31, குல்கர்னி 2-52).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com