ஈடன் கார்டன் விவகாரம்: பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

புது தில்லி, ஜன.29: ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் ஆட்டத்தை வேறு மைதானத்துக்கு மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது.  கொல்கத்தா ஈடன்
Published on
Updated on
1 min read

புது தில்லி, ஜன.29: ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் ஆட்டத்தை வேறு மைதானத்துக்கு மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது.

 கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால் அங்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு ஐசிசி அனுமதி மறுத்தது. அந்த ஆட்டத்தை வேறு மைதானத்தில் நடத்தவும் ஐசிசி உத்தரவிட்டது.

 இதையடுத்து உலகக் கோப்பை ஆட்டத்தை வேறு மைதானத்துக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ மூலமாக ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம். மேலும் பணியை முடிப்பதற்கு கூடுதல் நாள்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 ஆனால் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது ஐசிசி. ஈடன் கார்டனில் முதல் ஆட்டத்தை நடத்துவது தொடர்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்று ஐசிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஹாரூன் லோர்கட், பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் மைதானத்தில் அனைத்து பணிகளையும் முடித்து ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் லோர்கட் தெரிவித்துள்ளார்.

 இதை மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்யுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com