மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் தோனிக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 30 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.