வெற்றியைப் பறித்துவிட்டது மழை: தோனி

பிரிட்ஜ்டவுன், ஜூலை 3: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியை எங்களிடம் இருந்து மழை பறித்துவிட்டது என இந்திய கேப்டன் தோனி கூறினார்.  இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண
வெற்றியைப் பறித்துவிட்டது மழை: தோனி
Published on
Updated on
1 min read

பிரிட்ஜ்டவுன், ஜூலை 3: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியை எங்களிடம் இருந்து மழை பறித்துவிட்டது என இந்திய கேப்டன் தோனி கூறினார்.

 இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதுகுறித்து தோனி கூறியது:

 நாங்கள் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும், மழை எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டது. மழையோ, மோசமான வானிலையோ நமது கையில் இல்லை. அதனால் நாம் ஏமாற்றம் அடைய எந்தக் காரணமும் இல்லை. 80 ஓவர்களில் 281 ரன்கள் என்பது கடினமான இலக்கு என்று நினைத்தேன். மைதானமும் ஈரப்பதமாக இருந்ததால் ரன் குவிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்றார்.

 இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு குறித்துப் பேசிய தோனி, அவர், ஜாகீர்கானிடம் இருந்து பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக்கொண்டுள்ளார். அதனால் இப்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்தப் போட்டியில் அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆடினர். இஷாந்த், லட்சுமண், ராகுல் திராவிட் ஆகியோர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றார்.

 முதல் போட்டியில் விளையாடியபோது நடுவர் டேரில் ஹார்பரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்தது குறித்து தோனியிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.