ஐ.சி.சி. மக்கள் விருது: தோனிக்கு வாக்களிக்க தயாராகும் ரசிகர்கள்

ராஞ்சி, ஜூலை 30: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) மக்கள் விருதுக்கு தோனிக்கு வாக்களிக்க ராஞ்சியைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் தாயராகி வருகின்றனர். தோனிக்கு வாக்களிக்குமாறு தங்களுடைய நண்பர்கள்,
ஐ.சி.சி. மக்கள் விருது: தோனிக்கு வாக்களிக்க தயாராகும் ரசிகர்கள்
Published on
Updated on
1 min read

ராஞ்சி, ஜூலை 30: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) மக்கள் விருதுக்கு தோனிக்கு வாக்களிக்க ராஞ்சியைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் தாயராகி வருகின்றனர்.

தோனிக்கு வாக்களிக்குமாறு தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டாவது ஆண்டு ஐசிசி மக்கள் விருது பட்டியலில் இந்திய கேப்டன் தோனி, இலங்கை வீரர் குமார் சங்ககரா, இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஜ்ஜ்ஜ்.ப்ஞ்ல்ங்ர்ல்ப்ங்ஸ்ரீட்ர்ண்ஸ்ரீங்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்கலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து 1996-97-ம் ஆண்டுகளில் தோனி விளையாடிய ரயில்வே மற்றும் கமாண்டோ கிளப் அணிகளுக்கு எதிராக விளையாடிய அஜய் குமார் கூறியது: மக்கள் விருதுக்காக தோனிக்கு வாக்களிக்குமாறு எனது நண்பர்களிடம் கூறி வருகிறேன். தோனிக்காக வாக்களிப்பேன் என்றார்.

தோனி, கமாண்டோ கிளப்பில் விளையாடியபோது அங்கு பயிற்சியாளராக இருந்த பட்டாச்சார்யா என்பவர் கூறுகையில், "இந்த ஆண்டுக்கான ஐசிசி மக்கள் விருதை தோனி வெல்வார். அதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருது இந்தியாவுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனது குடும்ப உறுப்பினர்களும் தோனிக்காக வாக்களிக்கவுள்ளனர்' என்றார்.

பிகார் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அடில் உசேன் கூறுகையில், "இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்தது, புதுமையான திட்டமிடல் போன்றவற்றின் காரணமாக தோனி நிச்சயம் விருதை வெல்வார். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தோனிக்காக வாக்களிக்க காத்திருக்கின்றனர்' என்றார்.

விருதுக்கு தேர்வு செய்யப்படும் வீரரின் பெயர் செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.