நாட்டிங்காம், ஜூலை 30: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமாருக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கெவின் பீட்டர்சனுக்கு பந்துவீசினார் பிரவீண் குமார். அப்போது பந்து பீட்டர்சனின் பேடில் படவே, பிரவீண் குமார் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
இதையடுத்து பிரவீண் குமார் நடுவரிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து ஐசிசி விதிமுறையை மீறியதாகக் கூறிய மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மடுகலே, பிரவீண் குமாரின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.