ஹர்பஜன் மீண்டெழுவார்: துரானி நம்பிக்கை

மும்பை,ஜூலை 30: இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், மோசமான பார்மில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக பந்துவீசுவார் என்று இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சலிம் துரானி தெரிவித்துள்ளார். லார்ட
ஹர்பஜன் மீண்டெழுவார்: துரானி நம்பிக்கை
Published on
Updated on
1 min read

மும்பை,ஜூலை 30: இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், மோசமான பார்மில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக பந்துவீசுவார் என்று இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சலிம் துரானி தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக பந்துவீசியதைத் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

இந்த நிலையில் அவருக்கு ஆதவாக பேசிய துரானி மேலும் கூறியது: இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். எல்லோருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலுமே சறுக்கல்கள் ஏற்படும். அதுபோல்தான் இப்போது அவருக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சிறப்பாக பந்துவீசக்கூடும். சறுக்கல் ஏற்பட்டுள்ளதற்காக அவரின் திறமையை சந்தேகிக்கக்கூடாது என்றார்.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஹர்பஜன் மனம் தளர்ந்துவிடக்கூடாது என்று வலியுறுத்திய அவர், மிகவும் பொறுமையாக இருந்து, சரியாக பந்துவீச வேண்டும். அவர் திறமைமிக்க வீரர் மட்டுமின்றி, மூத்த வீரரும்கூட. அவர் டெஸ்ட் போட்டியில் 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்றார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோற்றது குறித்துப் பேசிய அவர், தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டெழும். லார்ட்ஸ் தோல்வி அணியை பாதித்திருக்கும்.

அது என்னையே சிறிதளவில் பாதித்தது. இது விளையாட்டுதான். அதனால் யாராக இருந்தாலும் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தபிறகு ஏமாற்றம்தான் அடைந்திருப்பார்கள்.

முதல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங், பெüலிங், பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் முற்றிலும் வித்தியாசமானது. இந்திய அணி மீண்டும் போராடத் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி முக்கியமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு 200 சதவீதம் வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்றார்.

தோனி குறித்துப் பேசிய துரானி, அவர் மிகவும் முதிர்ச்சியடைந்த கேப்டன். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.