சுடச்சுட

  

  இனவெறியைத் தூண்டிய சுவிஸ் வீரர் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கம்

  Published on : 26th September 2012 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லண்டன், ஜூலை 31: தோல்வியால் ஏற்பட்ட ஆத்திரத்தால் இனவெறியைத் தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சுவிட்சர்லாந்து கால்பந்து வீரர் மிஷேல் மோர்கனில்லாவை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  ஒலிம்பிக் கால்பந்து ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

  தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் சுவிட்சர்லாந்து கால்பந்து வீரர் மிஷேல் மோர்கனில்லா டுவிட்டர் இணையதளத்தில் தென் கொரியாவுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்டார்.

  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இதையடுத்து, அவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் இருந்து நீக்குவதாக சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது.

  இதையடுத்து அவர் விரைவில் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட இருக்கிறார்.

  இதனிடையே தனது செய்கைக்காக மிஷேல் மோர்கனில்லா தென் கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஒலிம்பிக் விதிப்படி வீரர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். இனவெறியுடன் நடந்து கொள்ளக் கூடாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai