சுடச்சுட

  
  1spt5

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தேவேந்திரோ சிங்.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 49 கிலோ லைட் ஃபிளைவெயிட் பிரிவில் பங்கேற்ற தேவேந்திரோ சிங் முதல் சுற்றில் மங்கோலியாவின் பெய்ரான் மொலினாவை சாய்த்து வெற்றி கண்டார்.

  ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். இதன்பிறகு அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர், தேவேந்திரோ சிங் வெற்றிபெற்றதாக அறிவித்தார். அப்போது தேவேந்திரோ சிங் 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் முதல் சுற்று 2 நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால் தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார்.

  தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியர் தேவேந்திரோ சிங். முன்னதாக விஜேந்தர் சிங், ஜெய் பகவான் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

  பதக்கப் பட்டியல்

  நாடு தங் வெ வெண் மொ

  1 சீனா 10 6 3 19

  2 அமெரிக்கா 6 7 5 18

  3 பிரான்ஸ் 4 1 4 9

  4 தென் கொரியா 3 2 2 7

  5 வட கொரியா 3 0 1 4

  6 கஜகஸ்தான் 3 0 0 3

  7 இத்தாலி 2 4 2 8

  8 ஜெர்மனி 2 3 1 6 9 ரஷியா 2 1 4 7

  10 ஜப்பான் 1 4 7 12 32 இந்தியா 0 0 1 1

  இந்திய வீரர்கள் இன்று...

  வில்வித்தை

  மகளிர் தனிநபர்

  வெளியேற்றும் சுற்று

  தீபிகா குமாரி யந

  ஆமி ஆலிவர் (பிரிட்டன்)

  நேரம்: பிற்பகல் 3.27

  ஹாக்கி

  இந்தியா யந நியூஸிலாந்து

  நேரம்: மாலை 6.15

  துப்பாக்கி சுடுதல்

  மகளிர் 25 மீ. பிஸ்டல்

  தகுதிச்சுற்று

  ராஹி சர்னோபட், அன்னுராஜ் சிங்

  நேரம்: மதியம் 1.30

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai