சுடச்சுட

  
  1spt12

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் கடைசி லீக் ஆட்டத்தில் 21-16, 21-15 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் ஷிந்தா முலியா-லெய் யோ ஜோடியை வீழ்த்தியபோதும், காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்திய ஜோடி.

  "பி' பிரிவில் இந்திய ஜோடியுடன் இடம்பெற்றிருந்த சீனதைபே, ஜப்பான் ஜோடிகளும், இந்திய ஜோடிகளைப் போலவே இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் ரேட்டிங் அடிப்படையில் இந்திய ஜோடியை விட சீனதைபே, ஜப்பான் ஜோடிகள் முன்னிலை பெற்றிருந்தன.

  ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரு ஜோடிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய ஜோடி வெளியேற நேர்ந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai