சுடச்சுட

  
  1spt6

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் ஜூடோ போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் இந்தியாவின் கரிமா செüத்ரி.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் ஜப்பானின் யோஷி இனோ 100-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் கரிமா செüத்ரியை வீழ்த்தினார்.

  இந்த ஆட்டம் 81 விநாடிகளிலேயே முடிவுக்கு வந்தது. இனோவின் ஆக்ரோஷமான தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் கரிமா நிலைகுலைந்தார். இதையடுத்து இனோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் 100 புள்ளிகளையும் பெற்றார்.

  இனோ, சர்வதேச அளவில் முன்னணி வீராங்கனை ஆவார். 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai