சுடச்சுட

  

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.

  ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றவரான வீனஸ், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் கனடாவின் அலெக்சாண்ட்ரா வோஸ்னியாக்கை வீழ்த்தினார்.

  இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய வீனஸ், ஒரு மணி நேரம் 3 நிமிடங்களில் இரு செட்களையும் வென்று ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

  அடுத்த சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மன் வீராங்கனை ஏஞ்ஜெலிக் கெர்பரை சந்திக்கிறார் வீனஸ் வில்லியம்ஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai