சுடச்சுட

  

  லண்டன், ஜூலை 31: துடுப்பு படகுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் துடுப்பு படகு காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஸ்வரண் சிங் விர்க் 4-வது இடத்தையே பிடித்தார். இதன்மூலம் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

  இதேபோல் ஆடவர் டபுள் ஸ்கல்ஸ் "ரெபிசேஜ்' சுற்றில் இந்தியாவின் சந்தீப் குமார்-மன்ஜீத் சிங் ஜோடி கடைசி இடத்தைப் பிடித்தது. காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

  துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இவர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர். இவர்கள் இப்போது வெளியேறியதன் மூலம் இந்தியாவின் பதக்க வாய்ப்பு தகர்ந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai