சுடச்சுட

  

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிரிவில் 136 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 167 கிலோ என மொத்தம் 303 கிலோ எடையைத் தூக்கினார். ஆனால் அவருக்கு 6-வது இடமே கிடைத்தது. 10 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் வட கொரியாவின் கிம் மியாங் ஹியோக் 329 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தையும், வெனிசுலாவின் ரிவேரோ 328 கிலோ எடையைத் தூக்கி 2-வது இடத்தையும், அஜர்பைஜானின் சர்தார் ஹசனோவ் 321 கிலோ எடையைத் தூக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  ஏற்கெனவே 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சோனியா சானு, இரண்டு தினங்களுக்கு முன்பு தோற்ற நிலையில், இப்போது ரவிகுமார் தோல்வி கண்டுள்ளார். இதன்மூலம் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர்களின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai