சுடச்சுட

  

  லண்டன், ஜூலை 31: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், போதிய ஆவணங்கள் இன்றி ஒலிம்பிக் பார்க் மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது அங்கு பாதுகாப்புக்கு இருந்த ராணுவ வீரர் தடுத்து நிறுத்தினார்.

  தன்னை அவர் தடுத்து நிறுத்தியது சரியே என்பதை உணர்ந்து கொண்ட டேவிட் கேமரூன், அந்த ராணுவ வீரருக்கு பாராட்டுத் தெரிவித்தார். அதன் பின்னர் தனது அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் அவர், மைதானத்துக்கு வந்தார். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, தான் தடுத்து நிறுத்தப்பட்ட தகவலை கேமரூன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவரான ஜேக்கஸ் கூட உரிய அடையாள அட்டை இல்லாமல் மைதானத்துக்குள் வர முடியாது என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai