Enable Javscript for better performance
பூபதி-போபண்ணாவின் பதக்க கனவு தகர்ந்தது!- Dinamani

சுடச்சுட

    

    பூபதி-போபண்ணாவின் பதக்க கனவு தகர்ந்தது!

    Published on : 26th September 2012 11:02 AM  |   அ+அ அ-   |    |  

    1spt11

    லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டு வெளியேறியது இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி.

    செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் பூபதி-போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட்-ஜூலியன் பென்னட்டா ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஒரு முறையும், இரண்டாவது செட்டில் இரு முறையும் இந்திய ஜோடியின் சர்வீஸ்களை முறியடித்தது பிரான்ஸ் ஜோடி.

    இரண்டாவது செட்டில் 3 கேம்களின் முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் 4-வது கேமில் போபண்ணா தனது சர்வீûஸ எதிர்ஜோடியிடம் இழக்க சரிவு ஆரம்பமானது. 9-வது கேமில் மீண்டும் போபண்ணாவின் சர்வீûஸ முறியடித்த பிரான்ஸ் ஜோடி 10-வது கேமில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

    முன்னதாக பயஸýடன் ஜோடி சேர்ந்து விளையாட மறுத்த பூபதியும், போபண்ணாவும் இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு நிர்பந்தம் அளித்து மீண்டும் ஜோடி சேர்ந்து ஒலிம்பிக்கில் களமிறங்கினர். இப்போது இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டனர்.

    40 வயதை நெருங்கிவிட்ட பூபதிக்கு இதுவே கடைசி ஒலிம்பிக்காக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த முறை பயஸýம், பூபதியும் ஜோடி சேர்ந்திருந்தால் பதக்கம் வெல்ல முடியும் என்ற நிலை இருந்தபோதும், கருத்து வேறுபாட்டால் இப்போது பதக்க வாய்ப்பை இழந்துள்ளார் பூபதி. அவருக்கு ஒலிம்பிக் பதக்கம் கடைசி வரை கனவாகவே போய்விட்டது!

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp