சுடச்சுட

  
  1spt7

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர்.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ராகுல் பானர்ஜி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும், ஜெயந்தா தலுக்தார், செக்ரோவ்லு ஆகியோர் முதல் சுற்றிலும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

  ஆடவர் தனிநபர் ரிகர்வ் முதல் சுற்றில் ராகுல் பானர்ஜி 6-2 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஜான்ஸ்டனை வீழ்த்தினார். ஆனால் அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3-7 என்ற கணக்கில் போலந்தின் ரஃபாலிடம் வீழ்ந்தார் பானர்ஜி.

  ஜெயந்தா, செக்ரோவ்லு தோல்வி: ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஜெயந்தா தலுக்தார் 0-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜேக்கப் ஊகீயிடம் தோல்வி கண்டார்.

  மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் செக்ரோவ்லு ஸ்வுரு 5-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் நிகோல்ஸிடம் தோல்வி கண்டார்.

  காய்ச்சலால் பாதிப்பு: தோல்விக்கு பின்னர் ஜெயந்தா தலுக்தார் கூறுகையில், "காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாலேயே எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் போனது. நான் (ஜெயந்தா தலுக்தார்), தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி ஆகியோர் போட்டி தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னதாக காய்ச்சால் பாதிக்கப்பட்டதால், மிகவும் பலவீனமாகிவிட்டோம்.

  தரவரிசை சுற்றில் மோசமாக விளையாடியதற்கு காய்ச்சல்தான் காரணம்.

  தனி நபர் பிரிவில் நான் தோற்றதற்கு சவால் நிறைந்த "டிரா'வும் ஒரு காரணம். ஜேக்கபுடனான முதல் சுற்று ஆட்டத்தில் முதல் செட்டில் சிறப்பாக விளையாடவில்லை.

  ஆனால் 3-வது செட்டில் சிறப்பாக செயல்பட்டேன். ஜேக்கப் என்னைவிட சிறப்பாக செயல்பட்டார். ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினால் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai