சுடச்சுட

    
    1spt3

    லண்டன், ஜூலை 31: இந்த ஒலிம்பிக் போட்டியில் குறைந்த வயதில் தங்கம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் லிதுவேனியாவின் ரூடா மெய்லுடைடி.

    15 வயதாகும் பள்ளிச் சிறுமியான அவர் மகளிர் 100 மீட்டர் ஃபிரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 40 ஆண்டுகளாக இருந்த சாதனையையும் அவர் முறியடித்தார்.

    மிகச்சரியாக 15 ஆண்டுகள் 133 நாள்களில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ரூடா. இதன் மூலம் இந்த ஒலிம்பிக்கில் லிதுவேனியாவுக்கு முதல் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார். 1 நிமிடம் 5.47 விநாடிகளில் அவர் இலக்கை எட்டினார். நீச்சலில் உலக சாம்பியனான அமெரிக்காவின் ரெபேக்கா சோனியை அவர் பின்னுக்குத் தள்ளினார். ரெபேக்கா 1 நிமிடம் 5.55 விநாடிகளில் இலக்கை எட்டினார். ஐப்பானின் சாடோமி வெண்கலம் வென்றார்.

    வடக்கு ஐரோப்பிய நாடான லிதுவேனியா சார்பில் பங்கேற்றாலும், கடந்த இரு ஆண்டுகளாக ரூடா, பிரிட்டனில் வசித்து வருகிறார். லிதுவேனியா சார்பில் நீச்சலில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் அவர்தான்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai