சுடச்சுட

  
  1spt2

  லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடிகள் முன்னேறியுள்ளன.

  பூபதி-போபண்ணா ஜோடி தங்களின் முதல் சுற்றில் கடுமையான போராட்டத்துக்கு பிறகு 7-6 (4), 6-7 (4), 8-6 என்ற செட் கணக்கில் பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி-அலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.

  பயஸ் ஜோடி வெற்றி: மற்றொரு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai