சுடச்சுட

  
  2spt13

  லண்டன், ஆக.1: ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் காஷ்யப். ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் காஷ்யப்தான்.

  புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் 21-14, 15-21, 21-9 என்ற செட் கணக்கில் இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை வீழ்த்தி ஆட்டத்தை 66 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

  ஆட்டத்தின் முதல் செட்டில் 11 கேம்களின் முடிவில் நிலுகா 7-4 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதன்பிறகு சரிவிலிருந்து மீண்ட காஷ்யப், 17-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இறுதியில் அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் அபாரமாக ஆடிய நிலுகா ஒரு கட்டத்தில் 18-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு காஷ்யப், சற்றுவேகமாக ஆடியபோதும் அந்த செட் 21-15 என்ற கணக்கில் நிலுகா வசமானது.

  இதைத்தொடர்ந்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய காஷ்யப் 21-9 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் காஷ்யப் 21-14, 15-21, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.

  இந்த ஆட்டத்தில் 5 அடி 8 அங்குலம் உடையவரான நிலுகாவுக்கு அவரது உயரம் கூடுதல் பலமாக அமைந்தது. இதனால் நிலுகா நல்ல ஷார்ட்களையும் ஆடினார். காஷ்யப் கடும் போராட்டத்துக்குப் பிறகே வெற்றி கண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai