சுடச்சுட

  
  2spt10

  லண்டன், ஆக.1: ஒலிம்பிக் ஆடவர் 64 கிலோ லைட்வெல்டர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார் (படம்) காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள 5-வது இந்திய வீரர் மனோஜ் குமார். செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மனோஜ் குமார் 13-7 என்ற கணக்கில் துர்க்மேனிஸ்தானின் ஹுடாய் பெர்டியேவை வீழ்த்தினார்.

  ஆட்டத்தின் முதல் சுற்றில் மனோஜ் குமார் சற்று நிதானமாகவே ஆடினார். இதனால் முதல் சுற்றின் முடிவில் இருவரும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். ஆனால் 2-வது செட்டில் மனோஜ் குமார் ஆக்ரோஷமாக ஆடினார். அவரின் அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹுடாய் தடுமாறினார். இதனால் இரண்டாவது செட்டின் முடிவில் மனோஜ் குமார் 7-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

  பின்னர் நடைபெற்ற 3-வது செட்டிலும் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய மனோஜ் குமார் இறுதியில் 13-7 என்ற கணக்கில் வெற்றி கண்டார். மனோஜ் குமார் அடுத்த சுற்றில் பிரிட்டனின் தாமஸ் ஸ்டால்கரை சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  விஜேந்தர் சிங் (75 கிலோ), ஜெய் பகவான் (60 கிலோ), தேவேந்திரோ சிங் (49 கிலோ), விகாஸ் கிரிஸன் (69 கிலோ, நேரடித் தகுதி) ஆகியோர் ஏற்கெனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இப்போது 5-வது வீரராக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார் மனோஜ் குமார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai