சுடச்சுட

  
  2spt2

  லண்டன், ஆக.1: ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

  புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ரஷியாவின் வேரா ஸ்வோனரேவாவை வென்று 51 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

  இந்தப் போட்டியில் செரீனாவின் அதிரடி ஷார்ட்களை ஸ்வோனரேவாவால் எதிர்கொள்ள முடியவில்லை. முதல் செட்டின் முதல் கேமிலேயே ஸ்வோனரேவாவின் சர்வீûஸ முறியடித்த செரீனா அந்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் செரீனாவே ஆதிக்கம் செலுத்தினார். இதனால் இந்த செட் 6 கேம்களிலேயே முடிவுக்கு வந்தது. இதில் ஸ்வோனரேவா தனது 3 சர்வீஸ்களையுமே செரீனாவிடம் இழந்தார்.

  செரீனா தனது காலிறுதிச்சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அல்லது ஸ்லோவேகியாவின் டேனிலாவை எதிர்கொள்வார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 14 பட்டங்கள் வென்றுள்ள செரீனா, ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவில் தனது சகோதரி வீனஸýடன் இணைந்து இரு முறை தங்கம் வென்றிருந்தாலும், ஒற்றையர் பிரிவில் இதுவரை தங்கம் வென்றதில்லை. சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற செரீனா, அப்போட்டி நடைபெற்ற அதே ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லும் முனைப்போடு விளையாடி வருகிறார்.

  காலிறுதியில் ஃபெடரர்: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முதல்நிலை வீரர் ரோஜர் ஃபெடரர் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஃபெடரர் காலிறுதியில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் அல்லது அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதுவார். சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஃபெடரர்.

  கடந்த ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் இணைந்து தங்கம் வென்ற ஃபெடரர், இந்த முறை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு கடுமையான முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த முறை அவர் தங்கம் வெல்லும் பட்சத்தில் கிராண்ட் ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெறுவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai