சுடச்சுட

  

  லண்டன், ஆக.1: ஜப்பான் பாட்மிண்டன் வீராங்கனைகளுக்கு எதிராக இந்தியா அளித்த புகாரை, போதிய ஆதாரம் இல்லை என்றுகூறி நிராகரித்துவிட்டது ஒலிம்பிக் கமிட்டி. இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் ஜுவாலா - அஸ்வினி ஆகியோரது காலிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது.

  ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

  ஜுவாலா-அஸ்வினி அடங்கிய இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஜப்பான், சீனதைபே, சிங்கப்பூர் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்ட ஜப்பான் அணி பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.

  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிங்கப்பூர் ஜோடிக்கு எதிரான மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி வெற்றிபெற்றது. 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றபோதும் இந்திய ஜோடியால் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

  மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி, சீனதைபேவிடம் தோற்றதாலேயே இந்தியாவின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.

  இந்த நிலையில் தென் கொரியா, சீனா மற்றும் இந்தோனேசிய வீராங்கனைகள் 8 பேர் வேண்டுமென்ற தோற்றதாகக் கூறி ஒலிம்பிக்கில் இருந்து புதன்கிழமை தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சீனதைபேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனைகள் சரியான உத்வேகத்துடன் விளையாடவில்லை என்று இந்தியா தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் போதிய ஆதாரம் இல்லையென்று என்று கூறி இந்தியாவின் புகாரை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துவிட்டது.

  இதுதொடர்பாக இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறுகையில், "சீனதைபே-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனைகள் வேண்டுமென்ற தோற்றுள்ளனர். அடுத்த சுற்றில் பலம் வாய்ந்த அணியுடன் மோதும் சூழல் வரக்கூடாது என்பதற்காக ஜப்பான் வீராங்கனைகள் திட்டமிட்டு இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.

  அதனாலேயே இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது என்று இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துவிட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜப்பான் வீராங்கனைகள் மீதான புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி எங்களின் கோரிக்கையை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துள்ளது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai